ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான பொது நேர்முகப் பரீட்சைக்குரிய நேர அட்டவணைகள் வௌியிடப்பட்டுள்ளன. தமிழ் மொழிமூல விண்ணப்பதாரிகளுக்கு நவம்பர் 20,22,24,26,மற்றும் 28 ஆம் திகதிகளில் நேர்முகப் பரீட்சைகள் கல்வி அமைச்சில் நடைபெறும்
இது தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள கல்வி அமைச்சின் அறிவித்தல் பின்வருமாறு
2024.09.27ம் திகதியுடையதாக அமைச்சின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் தரம் III இற்கு திறந்த அடிப்படையில் ஆட்சேர்த்தல் 2019(2020) இற்கு ஒவ்வொரு பாடங்களின் கீழும் பொது நேர்முகப் பரீட்சைக்காக ஆட்சேர்ப்பு அறிவித்தலின் பிரகாரம் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களது பெயர் பட்டியலுக்கமைய பொது நேர்முகப் பரீட்சை நடைபெறும் திகதிகள் மற்றும் உரிய நேரங்கள் குறிப்பிடப்பட்ட அழைப்புக் கடிதங்கள் விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பப் படிவங்களில் குறிப்பிட்டுள்ள முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. (அழைப்புக் கடிதத்தின் மாதிரி ஒன்றும் நேர்முகப் பரீட்சை நடைபெறும் திகதிகள் மற்றும் உரிய நேரங்கள் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணம் இதனுடன் தரப்பட்டுள்ளது.
உரிய திகதிகளின் உரிய நேரங்களில் அழைப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகளின் பிரகாரம் அனைத்து ஆவணங்களையும் தயார்படுத்தி நேர்முகப் பரீட்சை சபைக்கு வருகை தர வேண்டும். (தங்களுக்குரிய தினத்தில் உரிய நேரத்தில் வருகை தருவது கட்டாயமாகும்)
அன்றைய தினம் அழைப்புக் கடிதத்தின் தலைப்பு / இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களதும் மூலப் பிரதிகள் உள்ளடங்கிய கோவை ஒன்றையும், குறித்த ஆவணங்களின சான்றுப்படுத்தப்பட்ட நகல் பிரதிகள் உள்ளடங்கிய அதனை ஒத்த கோவை ஒன்றையும் தனித்தனியாக மேலே தரப்பட்டுள்ள நேர்முகப் பரீட்சை இலக்கம் மற்றும் சபை இலக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு நேர்முகப் பரீட்சை சபையினரிடம் முன்னிலைப்படுத்த வேண்டும். (ஆவணங்கள் அடங்கிய கோவையின் மேற்புறம் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதைக் காண்பிக்கும் மாதிரி ஒன்றும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.) அனைத்து சான்றிதழ்கள்/ ஆவணங்களின் பிரதிகளின் மீதும் அவை உண்மையான பிரதிகள் என்பதாக சான்றுப்படுத்த வேண்டும்.
அழைப்புக் கடிதத்தின் இலக்கம் 06 இன் கீழ் தரப்பட்டுள்ள மாதிரிப் படிவத்தை உரியவாறு பூரணப்படுத்தி உரிய திகதியில் நேர்முகப் பரீட்சை சபையினரிடம் முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதுடன் நேர்முகப் பரீட்சை நடைபெறும் சந்தர்ப்பத்தில் முன்னிலைப்படுத்தப்படவேண்டிய இந்த மாதிரிப் படிவத்தைப் பின்னராக முன்னிலைப்படுத்தும் பட்சத்தில் அவை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதால் அதனை இணையத் தளத்திலிருந்து உடனடியாக பதிவிறக்கம் செய்து உடனடியாக பூரணப்படுத்திக்கொள்வது விண்ணப்பதாரரின் பொறுப்பாகும் .
மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
0 கருத்துகள்