மாணவத் தலைவர் பதவி என்பது பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் மிகவும் பொறுப்பு வாய்ந்த பாரிய பணியாகும்.
பாடசாலையில் மாணவ தலைவர்கள் தெரிவு செய்யப்படும் பொழுது,
பயிலுனர் மாணவர் தலைவர் அணி
தரம் 9 இலிருந்து தெரிவு செய்யப்படுவர். மாணவர் தொகை போதுமாக இ்ல்லாது விடின் 6,7,8 ஆம் வகுப்புகளிலிருந்து தெரிவு செய்யலாம்.
மாணவ தலைவர் குழு
தரம் 10 - 11, 12 - 13 இலிருந்து தெரிவு செய்யப்படுவர்.
தரம் 10 - 11 மற்றும் 12 - 13 உள்ள பாடசாலைகளில் கனிஷ்ட மாணவ தலைவர்/தலைவியாக தரம் 10,11 மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
சிரேஸ்ட மாணவத் தலைவர்/தலைவி யாக தரம் 12,13 இலிருந்து மாணவர் தெரிவு செய்யப்படுவர்
மாணவ தலைவர்களுக்கு ஒப்படைக்க முடியுமான சில பொறுப்புகள்
- ஒழுக்கம்
- விளையாட்டு
- நலன்புரிச் செயற்பாடுகள்.
- சமயம் மற்றும் விழுமிய செயற்பாடுகள்.
- வைபவங்களை ஒழங்கமைத்தல்
- கல்வி வேலைத் திட்டங்கள்.
- ஆரோக்கியமும் போஷாக்கும் மற்றும் சுகாதாரச் செயற்பாடுகள்.
- போதை ஒழிப்பு
- வாகனங்கள் ஒழுங்குபடுத்தல் மற்றும் வீதிப் பாதுகாப்பு
- தொடர்பாடல் செயற்பாடுகள்
- பாடசாலை வளவு மற்றும் சூழல் சுத்தம்
- சமுகம் மற்றும் வெளிவாரிச் செயற்பாடுகள்.
- அனர்த்த முகாமைத்துவம்
- இணைப்பாட விதான செயற்பாடுகள்
- பாடசாலை மேம்பாட்டு வேலைத்திட்டம்
மாணவ தலைவர் பொறுப்புகள்
- உரிய நேரத்தில் பாடசாலைக்கு வருதலும் கடமைக்கு சமுகமளித்தலும்.
- பாடசாலையின் அன்றாட முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கும் நிர்வாகத்திற்கும் தேவையான உதவியை வழங்குதல்.
- பாடசாலையில் உள்ள சகல மாணவர் சமூகத்தினரதும் பிரதிநிதியாகச் செயற்படுதல்.
- பாடசாலையின் கலாச்சாரத்திற்கு பெறுமதி சேர்க்கும் விடயங்களுக்கு மதிப்பளித்துப் பாதுகாத்தல்.
- பாடசாலையின் பௌதீக வளங்கள் மற்றும் சொத்துக்கள் என்பனவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்திப் பராமரிக்க உதவுதல்.
- பாடசாலையின் முகாமைத்துவத்திற்கும் மாணவர் சமுதாயத்திற்கும் இடையே இணைப்பாளராகச் செயற்படுதல்.
- பாடசாலையின் உள்ளேயும் பாடசாலையின் வெளியேயும் பாடசாலை நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு உதவியாக செயற்படுதல்.
- பாடசாலையின் இருப்புக்கு அவசியமான அனைத்து சட்ட திட்டங்களையும் மற்றும் ஒழுங்குமுறைகளையும் மதித்துப் பாதுகாத்து ஏனைய மாணவர்களையும் அவ்வாறு செயற்படத் தூண்டுதல்.
- தனது தலைமை வகிபாவத்தை சிறந்த முறையில் இனங்கண்டு பாடசாலைக்கு இயலுமான முறையில் அர்ப்பணிப்புடன் செயற்படுதல்.
- ஏனையோரை மதித்து . பொறுமையாகவும்,மரியாதையாகவும் செயற்படுதல்.
- மாணவர்களின் ஒழுக்கத்தையும் ஆளுமையையும் பாதுகாத்து ஏனைய மாணவர் சமூகத்தையும் அதற்குக் கீழப்படியச் செய்தல்.
- சிறந்த தொடர்பாடல் மிக்கவராகச் செயற்படுதல்.
- பாடசாலையிலுள்ள சகல பிள்ளைகளையும் சமமாக மதித்து செயற்படுதல்.
- சுய நிர்வாகம் மற்றும் தனிப்பட்ட முகாமைத்துவ செயற்பாடுகளில் சிறந்த நிபுணத்துவம் பெற்றவராக இருத்தல்.
- நலன்புரிச் செயற்பாடுகளில் தலையிட்டுச் செயற்படுபவராக இருத்தல்
மாணவ தலைவர் கடமைகள்
- மாணவத் தலைவர் குழுவினருக்காக வாரந்தோறும் நடைபெறும் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திற்குச் சமுகமளித்தலும் உறுப்பினர்களுக்கிடையேயான. ஆரோக்கியமான கருத்துக்கள் மற்றும் விவாதங்கள் என்பவற்றில் கருத்துக்களை முன்வைத்தலும் சுய விமர்சனம் செய்தலும்
- அன்றாடம் பொறுப்பு வாய்ந்த மாணவத் தலைவராக (Day Leader) பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அன்றாட அறிக்கையை அதிபர் / பிரதி அதிபர் மாணவத் தலைவர் கண்காணிப்புக்குழுத் தலைவர் ஆகியோரிடம் ஒப்படைத்தல்
- பாடசாலையில் ஏதாவது ஒரு பிரச்சினை / அல்லது விருத்தி செய்ய வேண்டிய ஒரு துறையை இனங்கண்டு அந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு குறைந்தளவு ஒரு வேலைத் திட்டத்தைச் செயற்படுத்துதல்
- நியமிக்கப்பட்ட காலத்தினுள் / நியமிக்கப்பட்ட காலத்தின் இறுதியில் கணிப்பீட்டு வினாக்கொத்து மூலம் தனது பலம் பலவீனம், சந்தர்ப்பங்கள், சவால்கள் (SWOT) என்பவற்றை இனங்கண்டறிதல்.
- அன்றாட நாட்குறிப்பு புத்தகம் (Journal) / தளக்குறிப்புப் புத்தகம் என்பவற்றைப் பயன்படுத்தலும் அதனை உரிய முறையில் இற்றைப்படுத்தலும்.
0 கருத்துகள்