மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தினால் வருடாந்தம் அரச பாடசாலைகள் , அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலுகின்ற மாணவர்களுக்குச் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இலவசமாக பாடநூல்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இவ்வாறு பெருந்தொகை பணம் செலவழித்து வழங்கப்படுகின்ற பாடநூல்கள் மீளப் பயன்படுத்தக்கூடிய வகையில் அவற்றை பாவிக்கும் பொறுப்பு மாணவர்களை சாரும். இது தொடர்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கூடிய கரிசனை காட்டுதல் வேண்டும்.
மீளப்பெறக்கூடாத பாடநூல்கள்
- பக்கங்கள் கிழிந்த/ஓரங்கள் மடிக்கப்பட்ட/பக்கங்கள் கழன்ற நூல்கள்
- மேலுறை கழன்றுள்ளவை/கிழிந்தவை
- பக்கங்களில் குறிப்புகள் எழுதப்பட்டவை/வர்ணம் பூசப்பட்டவை/பகுதிகள் வெட்டி வேறாக்கப்ட்டவை
- பயிற்சிகளுக்கான விடைகளைப் பாடநூல்களில் எழுதியிருத்தல்( செயல் நூல்களுக்குப் பொருத்தமில்லை)
எனினினும் பாடநூல்கள் மீள பயன்படுத்த பொருத்தமானது என பாடநூல் பொறுப்பாசிரியர் இனங்காண்பாராயின் அப்பாடநூல்களை மீளப் பயன்படுத்த முடியும்.
மாணவர்களுக்கு பாடநூல்களை வழங்கும் போது
- எச்சந்தர்ப்பத்திலும் மாணவருக்கு வழங்கும் சகல பாடநூல்களும் பயன்படுத்தப்பட்ட பாடநூல்களாக இருக்கக்கூடாது.
- பயன்படுத்தப்பட்ட பாடநூல்கள் மற்றும் புதிய பாடநூல்கள் பகிர்ந்தளிக்கப்படும் போது எல்லா மாணவர்களும் சமமானவர்களே எனக் கருத்திற்கொண்டு பொருத்தமான விதத்தில் கலந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
பாடநூல்கள் பயன்படுத்துவது தொடர்பில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பின்வரும் விடயங்களை அறிவித்தல் வேண்டும். வகுப்பு மட்ட/ பாடசாலை மட்ட பெற்றோர் கூட்டங்களின் போது இதனை மேற்கொள்ளலாம்.
பாடநூல் பாவனை அறிவுறுத்தல்கள்
- பாடநூல்களில் குறிப்புகள் எழுதுதல், நிறம் தீட்டுதல் கூடாது.
- படங்களை வெட்டி வேறாக்கக் கூடாது.
- பக்கங்களை கழற்றி வேறாக்கல், மடித்தல், கிழித்தல் கூடாது.
- பாடநூல்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படாத விதத்தில் புத்தகப் பையில் பாடநூல்களை அடுக்குதல் வேண்டும்
- பாடநூல்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் வெளி அட்டைக்கு உறை இடப்படல் வேண்டும்.
0 கருத்துகள்