ஒரே தேசிய பாடசாலையில் பத்து வருடங்களுக்கு மேல் கடமையாற்றிய 9 000 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது என இன்றைய அருன வாராந்த நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது.
2025 ஆம் வருடத்திற்கான தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் இவ்வருடம் நிகழ்நிலையில் கோரப்பட்டிருந்தது. குறித்த விண்ணப்ப அறிவுறுத்தலில் 10 வருட சேவை தொடர்பில் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அருன வாராந்த நாளிதழின் குறிப்பிட்டுள்ளதாவது, ஒரே தேசிய பாடசாலையில் 10 வருடங்களுக்கு மேல் கடமை புரிந்த 9 000 ஆசிரியர்கள் அடுத்த வருடம் முதல் இடமாற்றம் செய்யப்படுவர் என கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது.
இடமாற்றத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு, அரசியல் நெருக்கடி காரணமாக கைவிடப்பட்ட கொழும்பு நகர பிரபல பாடசாலையின் ஆசிரியர்களுக்கும் இதன்போது கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அருண நாளிதழின் செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்