2024 உயர்தர பரீட்சை அறிவுறுத்தல்கள்



2024 உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவுறுத்தல்களை வௌியிட்டுள்ளது.

  • அனுமதி அட்டைகள் கிடைத்தவுடன் அதிபர் உடனடியாக விண்ணப்பதாரிகளுக்கு அவற்றை பகிர்ந்தளிக்க வேண்டும்.
  • தபால் மூலம் அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறா தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் 2024.11.18 ஆம் திகதியிலிருந்து www.doenets.lk பரீட்சைத் திணைக்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் நுழைந்து தமது அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
  • அனுமதி அட்கைளில் பெயர், பாடம், மொழிமூலம் என்பவற்றில் மாற்றங்கள் செய்ய வேண்டி இருப்பின் நிகழ்நிலையில் மேற்கொள்ளலாம்.
  • திருத்தங்கள் ஒரு தடவை மாத்திரமே மேற்கொள்ள முடியும்
  • பரீட்சை நிலையம் மாற்றப்பட மாட்டாது
  • திருத்தங்கள் மேற்கொள்ளப்படின், அவ்வாவணம் அச்சுப் பிரதியெடுக்கப்பட்டு அனுமதி அட்டையுடன் இணைக்கப்படல் வேண்டும்.
  • அனுமதி அட்டை திருத்தங்களை நவம்பர் 18 வரை மேற்கொள்ளலாம்
  • தேசிய அடையாள அட்டை திருத்தங்கள் தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்திற்கு நேரில் சமுகமளிக்க வேண்டும். பாடசாலை பரீட்சார்த்தி எனின் அதிபர் செல்லல் வேண்டும். தனிப்பட்ட பரீட்சார்த்தி எனின், அனுமதி அட்டையின் மூலப் பிரதியுடன் உரிய நபர் செல்லல் வேண்டும்.
  • விண்ணப்பதாரிகள் அனுமதி அட்டையில் பரீட்சைச் சுட்டெண், தோற்றுகின்ற பாடங்கள், நடைபெறும் தினம், நேரம் என்பன அச்சிடப்பட்டுள்ள பகுதியை வேறாக்கி தம்மிடம் வைத்துக் கொள்ளல் வேண்டும்.
  • பாடமோதல்கள் இருப்பின் நேர காலத்துடன் மேற்பார்வையாளருக்கு அறிவித்தல் வேண்டும். ஒரே நாளில் இரண்டு பாடங்கள் நடைபெறும் சந்தர்ப்பம் ஏற்படும் போது, விண்ணப்பதாரி பரீட்சை மண்டபத்திலேயே உணவை எடுத்துக் கொள்வதற்கு ஆயத்தமாக வரல் வேண்டும். நேர அட்டவணையில் முதலில் குறிப்பிடப்பட்ட பாடத்தினை நிறைவு செய்து விட்டு, அடுத்த பாடத்திற்கு விடையளிக்க விசேட ஒழுங்குகள் செய்து தரப்படும்.
  • பரீட்சார்த்திகள் Bluetooth போன்ற இலத்திரனியல் உபகரணங்கள்/கருவிகள் Electronic Communication Devices) பயன்படுத்தாதிருப்பதை உறுதி செய்யும் பொருட்டு பரீட்சை மண்டபத்தில் பரீட்சை நேரம் முழுவதும் தமது இரு காதுகளும் திறந்தபடி தெளிவாகத் தெரியுமாறு இருத்தல் வேண்டும். அவ்வாறு செயற்படாத பரீட்சார்த்திகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பரீட்சைக்குத் தோற்றும் சகல பரீட்சார்த்திகளும் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளரால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.
  • ஒரு பரீட்சார்த்திக்காக வேறொரு பரீட்சார்த்தி பரீட்சைக்குத் தோற்றுதல், குறிப்புக்கள் வைத்து பரீட்சைக்கு விடையளித்தல், ஏனைய பரீட்சார்த்திகளின் உதவியைப் பெறுதல், உதவிசெய்தல் பரீட்சை மண்டபத்திலும் அதற்கு அண்மையிலும் கோஷமிடல் என்பன பரீட்சை சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்
  • நிரற்படுத்தப்படாத கணிப்பொறிகளை கணக்கீடு, பொறியியல் தொழிநுட்பவியல், உயிர்முறைகள் தொழினுட்பவியல், தொழினுட்பவியலுக்கான விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு மட்டும் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்
  • செல்லிடத் தொலைபேசிகள், ஸ்மாட் கைக்கடிகாரம், கணித்தற்பொறிகள் வேறு இலத்திரனியல் உபகரணங்கள் ஆகியவை கொண்டுவருதல் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் இவ்வறிவுறுத்தல்களை மீறும் பரீட்சார்த்திகள் தண்டனைகளுக்கு உள்ளாகுவர்
  • பரீீட்சைப் பிரச்சினைகள் தொடர்பில் முறையிட பரீட்சார்த்திகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்த முடியும் 0112 784 208, 0112 784 537, 0112 786 616, 1911

கருத்துரையிடுக

0 கருத்துகள்