2024 உயர்தர பரீட்சை அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் செய்ய வேண்டி இருப்பின் எதிர்வரும் 18.11.2024 இற்கு முன்னர் நிகழ்நிலையில் மேற்படி திருத்தங்களை மேற்கொள்ளுமாறு இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை பரீட்சார்த்திகள் அதிபர் மூலமாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தாமாகவும் திருத்தங்களை மேற் கொள்ள முடியும்.
பெயர், மொழிமூலம், பாடம் என்பவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும். திருத்தம் ஒருமுறை மாத்திரமே மேற்காள்ளலாம்.
தேசிய அடையாள அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி இருப்பின், பாடசாலை பரீட்சார்த்தி எனின் அதிபரும், தனிப்பட்ட பரீட்சார்த்தி எனின் உரிய நபரும் பரீட்சைத் திணைக்களத்திற்கு நேரடிய விஜயம் செய்ய வேண்டும்.
அனுமதி அட்டை மாற்றங்களை பின்வரும் இணைப்பினூடாக மேற்கொள்ளலாம்
0 கருத்துகள்