வினாத்தாள் கசிவதை தடுக்க வினாத்தாள் வங்கி



தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத்தராதர சாதாரன தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் போது வினாத்தாள் கசிவதை தடுக்க வினாத்தாள் வங்கியொன்று ஸ்தாபிப்பதற்கான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளதாக இன்றைன தினகரன் (01.11.2024) செய்தி வௌியிட்டுள்ளது. 

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டிற்குள் இந்த வங்கியை ஸ்தாபிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். எதன் மூலம் வினாத்தாள்கள் உரிய காலத்திற்கு முன்பே  வௌியிடுதலை தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இப்புதிய வேலைத்திட்டத்தின் கீழ், வினாத்தாள் தயாரிப்பு நடவடிக்கைகள் நபர்களின் கைகளுக்கு செல்லாமல் , கணினி மூலம் மேற்கொள்ளப்பட்டு பரீட்சை விடைத்தாள்கள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பத்திரிசை செய்தியினை பார்க்க பின்வரும் இணைப்பை பயன்படுத்தவும்

வினாத்தாள் கசிவதை தடுக்க ....

கருத்துரையிடுக

0 கருத்துகள்