கண்டி பிரதேச பிரபல பாடசாலையொன்றில் நேற்றைய தினம்(01.11.2024) இடம்பெற்ற தபால்மூல வாக்களிப்பின் போது, வாக்குச்சீட்டை தன்னிடம் வைத்துக் கொண்டு, வேட்பாளர் பட்டியலை கடிதவுறையில் போட்டு, அதிபரிடம் கையளித்ததாக கூறப்படும் ஆசிரியை ஒருவர் கண்டி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்றைன தினமின நாளிதழ் (02.11.2024) செய்தி வௌியிட்டுள்ளது.
நேற்று நவம்பர் 01 ஆம் திகதி முற்பகல், தபால் மூல வாக்களிப்பு நிறைவுற்று வீட்டுக்குச் சென்று தனது கைப்பையை பரீட்சித்த போது, அதில் தபால் மூல வாக்களிப்பு சீட்டு இருப்பதை கண்ட குறித்த ஆசிரியை, உடனடியாக பாடசாலைக்கு சென்று அதிபரிடத்தில் தன்னால் இடம்பெற்ற தவறினை சுட்டிக் காட்டி குறித்த வாக்குச் சீட்டை கையளித்துள்ளார்.
வாக்கிச்சீட்டை வாக்களிப்பு இடத்திலிருந்து வௌியே கொண்டு செல்வது தேர்தல் சட்டப்படி தவறாதலால், இது தொடர்பில் அதிபர் தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவித்து, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
வாக்களிப்புக்கு இலகுவாக, வாக்குச்சீட்டுடன், வேட்பாளர்களின் பெயர்பட்டியலும் வழங்கப்படுகின்றது.
தனது பிள்ளை கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதாகவும், விபத்து இடம்பெற்றதன் பின்னர் தனது பிள்ளைக்கு மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் கிடைக்காமையால் தான் அதிக மன உழைச்சலுடன் காணப்பட்டதாகவும் மேற்படி ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
வேணுமென்று செய்திருந்தால் நான் இவ்வாக்குச்சீட்டை மீள சமர்ப்பிக்க வந்தருக்க மாட்டேன். இது தவறுதலாக நடைபெற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த ஆசிரியை சரியாக வாக்குப்பதிவை மேற்கொண்டுள்ளார் என குறித்த அதிபர் குறிப்பிட்டிருப்பின் , தேர்தல் சட்டங்களுக்கு அமைய அவரும் தவறு செய்தவராக கருதப்படுவார்.
இச்சம்பவம் தொடர்பில் கண்டி பொலிசாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த ஆசிரியை நீதிமன்றுக்கு ஆஜர் படுத்தப்படவுள்ளார்.
0 கருத்துகள்