தொழில்நுட்பவியல் நிறுவகம் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் மூன்று (03) வருடகால முழுநேர தேசிய தொழில்நுட்பவியல் டிப்ளோமா கற்கை நெறிக்குத் தெரிவு செய்வதற்காக தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இக் கற்கை நெறியானது, தியகம, ஹோமாகமவில் அமைந்துள்ள தொழில்நுட்பவியல் நிறுவகம், மொறட்டுவைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடாத்தப்படும்.
பொது தகவல்கள்
தேசிய தொழில்நுட்பவியல் டிப்ளோமா கற்கை நெறியானது இரண்டு வருட முழுநேர கற்றலையும், ஒரு வருட தொழிற் பயிற்சியையும் உள்ளடக்கியது. இதன் கற்கை மொழி ஆங்கிலம் ஆகும். கற்கை நெறிகள் பின்வரும் கற்கைத் துறைகளில் வழங்கப்படுகின்றது.
கடல்சார் கற்கைநெறிகள் (வகை I)
(i) கடல்சார் பொறியியல் தொழில்நுட்பம்
(ii) கப்பற்துறை கல்வி
ஏனைய கற்கைநெறிகள் (வகை II)
- இரசாயன பொறியியல் தொழில்நுட்பம்
- குடிசார் பொறியியல் தொழில்நுட்பம்
- மின்சார பொறியியல் தொழில்நுட்பம்
- இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு
- பொறியியல் தொழில்நுட்பம்
- தகவல் தொழில்நுட்பம்
- இயந்திரவியல் பொறியியல் தொழில்நுட்பம்
- பல்பகுதிய தொழில்நுட்பம்
- புடவை மற்றும் ஆடைத் தொழில்நுட்பம்
கல்வித்தகைமைள்
விண்ணப்பதாரிகள் க.பொ.த. (உ/த) பரீட்சையில், கீழ் குறிப்பிட்டுள்ள பாடங்களில் மூன்றில் (03) சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
(i) பௌதிகவியல்
(ii) இரசாயனவியல்
(iii) இணைந்த கணிதம்
(iv) உயர் கணிதம்
அத்துடன், இலங்கை பரீட்சைகள் ஆணையாளரினால் 2021 அல்லது 2022 அல்லது 2023ஆம் நடாத்தப்பட்ட க.பொ.த. (உ/த) பரீட்சைகளில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
கடல்சார் கற்கைநெறிகள் (வகை I)இற்கு விண்ணப்பிற்கும் விண்ணப்பதாரிகள் க.பொ.த. (ச/த) பரீட்சையில் ஆங்கில மொழி பாடத்திவ் C சித்தி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப முடிவு 02.12.2024
மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
0 கருத்துகள்