அமெரிக்க தூதரக வேலை வாய்ப்பு கொழும்பு



HVAC Mechanic பதவி வெற்றிடத்திற்கான வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை இலங்கை அமேரிக்க தூதரகம் வினவியுள்ளது.

வாரத்திற்கு 40 மணித்தியாலங்கள் வேலை

மாதாந்த கொடுப்பனவு - 479.91 அமெரிக்க டொலர்கள்

விண்ணப்ப முடிவு - நவம்பர் 22

தொழிலுக்கான தகுதி:

  • கல்வி : இரண்டாம் நிலைக் கல்வியைப் பூர்த்தி செய்திருப்பது (க.பொ.த.சாதாரண தரத்தை பூர்த்தி செய்திருத்தல் - கணிதம் உள்ளிட்ட 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். அத்துடன் குறைந்தப் பட்சம் 3 பாடங்களிலாவது விசேட அல்லது சாதாரண சித்தியைப் பெற்றிருத்தல் வேண்டும்) கட்டாயமாகும். அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமொன்றினால் HVAC தொழில்நுட்பவியலாளருக்கான விசேட பயிற்சி மட்டத்திலான தொழிற் பயிற்சிப் பாடநெறியைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். (உரிய கல்விச் சான்றிதழ்களின் பிரதிகள் இணைக்கப்படல் வேண்டும்.)
  • முன்னைய தொழில் அனுபவம் : வணிக அல்லது கைத்தொழில் மட்டத்தில் வெப்ப, வென்டிலேட்டர் மற்றும் குளிரூட்டல் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு தொடர்பில் குறைந்தபட்சம் 3 வருடகால சேவை அனுபவத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். (உரிய சேவை நிறுவனத்தின் அனுபவம் தொடர்பான சான்றிதழ்களின் பிரதிகளை இணைத்தல் வேண்டும்.)
  • மொழித்திறன் : அத்துடன் மட்டம் II (வரம்புக்குட்பட்ட அறிவு) ஆங்கில மொழி வாசித்தல் எழுதுதல், பேசுதல் போன்ற திறன்கள் அவசியமாகும். (இந்த ஆற்றல் பரிசீலிக்கப்படும்) அத்துடன் மட்டம் III (சிறந்த தொழில் அறிவு) சிங்களம் மற்றும்/அல்லது தமிழ் மொழி வாசித்தல், எழுதுதல் மற்றும் பேசுதல் அவசியம்
  • தொழில் அறிவு : ஸ்டாடர் மோட்டார், உஷ்ண நிலை கட்டுப்பாடு, ஈரப்பதன் கட்டுப்பாடு, பல்வேறு அதிர்வெண் இயக்கி(VFD), மோட்டார் மற்றும் கட்டுப்பாடு மோட்டார் மற்றும் புவியீர்ப்பு டெம்பர் (motorized and gravity damper), உணரிகள் மற்றும் கட்டிட தானியங்கி கட்டமைப்பு, உலைகள் ஹைட்ரோனிக் கட்டமைப்பு, வெந்நீர் ஹீட்டர் மற்றும் வெப்ப குழாய்கள், ஆவியாக்கிகள் மற்றும் மின்தேக்கிகள், குளிரூட்டிகள் மற்றும் கொதிகலன்கள் உள்ளிட்ட வெப்ப, வென்டிலேட்டர் மற்றும் குளிரூட்டல் (HVAC) கட்டுப்பாடு பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள். மோட்டார்கள், வேல்வுகள், பம்பிகள், கட்டுப்பாடு மற்றும் பதிவுகளை மேற்கொள்ளும் உபரகணங்களின் சிறிய மட்டத்திலான பாகங்களை மீளப் பொருத்துதல். இந்த நாட்டின் சுற்றுநிரூபங்களுக்கமைய கண்காணிப்பு, கோளாறுகளை அடையாளம் காணுதல், வடிவமைப்பு தேவைகளுக்கு பொருந்தும் வகையில் தற்போது காணப்படும் செயற்பாட்டு கொள்ளளவை தீர்மானித்தல் போன்ற HVAC ஆய்வு நடைமுறைகள் தொடர்பிலான அறிவைக் கொண்டிருத்தல் பொறியியல் வரைபுகள், விவரக்குறிப்புகள், HVAC திட்டவரைபுகள், ஒரு வரி வரைபடங்கள் மற்றும் திடப்பொருள் ஆவண வாசிப்பு மற்றும் அவற்றைப் பயன்படுத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளும் ஆற்றல்.
  • திறன்கள் மற்றும் ஆற்றல் : கட்டமைப்பு பயன்பாட்டாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் வகையில் சிறந்த தொடர்பாடல் மற்றும் தனிநபர் ஆற்றலைக் கொண்டிருத்தல். குழுவின் உறுப்பினராக செயற்படுவதற்கும், வேலை அழுத்தங்களுக்கு மத்தியில் கடமையாற்றுவதற்கும், கடினமான கால அட்டவணையின் கீழ் செயற்படுவதற்கும் ஆற்றல் இருத்தல் வேண்டும். வேலை நேர அட்டவணை தொடர்பில் நெகிழ்வுத்தன்மை மற்றும் நாளின் எந்தவொரு நேரத்திலும், அவசர அழைப்புக்கு பதில் வழங்கும் இயலுமையும் இருத்தல் வேண்டும். ஐந்து வருடங்களாக பயன்பாட்டிலிருக்கும் செல்லுடியான, B வகுப்பிலான (இரட்டை நோக்கு வாகனம்) சாரதி அனுமதிப் பத்திரத்தைக் கொண்டிருத்தல்.
மேலதிக விபரங்கள் பின்வரும் இணைப்பில்

கருத்துரையிடுக

0 கருத்துகள்