பாடசாலை கல்வி செயற்பாடுகளுக்கு சமூக ஊடக பாவனை


பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்பாடலுக்காக சமூக ஊடக பிரயோகங்களை பாவிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றினை வௌியிட்டுள்ளது. சிங்கள சுற்றறிக்கையின் தமிழாக்கம் கீழே வழங்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை இல - 33/2024

சுற்றறிக்கை திகதி - 08.11.2024

கொவிட் காலத்தில் பாடாசாலை மாணவர்களின் தவறவிடப்பட்ட கல்வி நடவடிக்கைகள் நிறைவு செய்யும் பொருட்டு வட்சப், வைபர் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டு பாடசாலை முறைமையின் தொடர்பாடல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்றும் கூட குறித்த சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டு பாடசாலையின் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மேலதிக கற்றல் விடயங்கள் வழங்குதல், பாடக்குறிப்புகள் பரிமாறுதல், தொடர்பாடல் என்பன மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்படி சமூக ஊடக பாவனைகள் தொடர்பிலான பாதிப்புகள் தொடர்பில் கல்வி அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளமையினால், அது தொடர்பில் பின்வரும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு அனைத்து ஆசிரியர்கள் மற்றும் குறித்த தரப்பினரை கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

1. குறித்த வட்சப் குழுமங்களில் அதிபர்/பிரதிஅதிபர்.உதவி அதிபர்/பகுதித் தலைவர் அட்மின்களாக செயற்படல் வேண்டும். முறையான மேற்பார்வையின் கீழ் அவற்றின் தரத்தினை பேணல் வேண்டும்.

2. பாடசாலை நேரம் முழுமையாக பயன்படுத்தப்பட்டு, நேரடி கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் மூலம் பாடவிதானங்கள் நிறைவு செய்யப்படல் வேண்டும். பாடவிதானங்களை நிறைவு செய்வற்காக இவற்றினை பயன்படுத்தல் கூடாது.

3. கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு தொடர்பாடல் ஊடகங்கள் பயன்படுத்தும் போது, குறித்த தொழினுட்ப வசதிகள் அற்ற மாணவர்கள் பாதிப்படையாத வண்ணம் மேற்படி செயற்பாடுகள் திட்டமிடப்படல், உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

4. விசேடமாக ஆரம்பப் பிரிவு மாணவர்கள் பாடசாலைக்கு கொண்டு வர வேண்டிய கற்றல் உபகரணங்கள் / பொருட்கள் தொடர்பில் அறிவிக்கும் போது, முறையான திட்டமிடலுடன், போதுமான கால நேரம் வழங்கப்பட்டு பெற்றோருக்கு அறியப்படுத்தல் வேண்டும்.  அது தொடர்பில் நினைவூட்டலுக்காக மாத்திரம் மேற்படி தொடர்பாடல் ஊடகங்கள் பயன்படுத்தல் வேண்டும்.

5. மாணவர்கள் வீட்டில் செய்ய வேண்டிய பயிற்சிகள் மற்றும் ஒப்படைகள் வகுப்பறை கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளின் போது மாத்திரம் வழங்கப்படல், விளங்கப்படுத்தல் வேண்டும். பெற்றோர் மற்றும் வீட்டின் ஏனைய அங்கத்தவர்கள் சிரமத்துக்கு உள்ளாகும் வண்ணம் மேற்படி விடயங்களுக்கு தொடர்பாடல் ஊடகங்கள் பயன்படுத்தப் படக்கூடாது.

6. இத்தொடர்பாடல் ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டு, எவ்விதத்திலும் மாணவர்களின் தனியுரிமைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் வகையில் ஏதும் செய்தி, வீடியோ, புகைப்படம், குரல் பதிவு,அறிவித்தல் என்பவை பகிரப்படக்கூடாது என்பதுடன், அவ்வாறு நிகழும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பில் கல்வி அமைச்சினால் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்படும்.

7. கல்வி அபிவிருத்தி மற்றும் கடமைகள் தொடர்பக மேற்படி தொடர்பாடல் ஊடகங்கள்  ஒழுங்கற்ற முறையில்  பாடசாலை சமூகம் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பு படுத்தப்பட்டு செயற்படுத்தப்படும் போது, பாடசாலை பெயருக்கு, சமூகத்திற்கு மற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் குறித்த குழுமங்களின் அட்மின்களுக்கு பொறுப்புச் சாட்டப்படுவதுடன், அது தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாட்டின் பொதுச் சட்டம் மற்றும் தகவல் தொடர்பாடல் சட்டத்தின் அடிப்படையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர்

மூலப்பிரதி சிங்களத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்