காட்டிக் குடுத்தமையை பழிவாங்கும் விதமாக வகுப்பறையில் தின்னர் திரவத்தை
பற்றவைத்து ஒரு மாணவனை தீ வைத்துக் கொளுத்திய 5
ஆம் வகுப்பு மாணவர்கள் மூவர் கம்பளை, குருந்துவத்தை
பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கம்பளை கல்வி வலயத்தின் குருந்துவத்த,
யடபான பகுதியில் உள்ள ஒரு ஆரம்பப் பாடசாலையில் , வகுப்பறையில் இருந்து பெயிண்ட் தின்னர் பாட்டிலை திருடியது தொடர்பாக காட்டிக்
கொடுத்தமையினால் கோபமடைந்த 10 மற்றும் 11
வயதுடைய மூன்று ஆரம்பப் பிரிவு மாணவர்கள், பெயிண்ட்
கொள்கலனில் தின்னரை ஊற்றி, தீ வைத்து, மற்றொரு
மாணவர் மீது வீசியதில், மாணவரின் கால்கள் எரிகாயங்களுக்கு
உள்ளான சம்ம்பவம்தொடர்பில் நேற்று
முன்தினம் (15) குருந்துவத்த பொலிஸாரால் மூன்று ஆரம்பப்
பிரிவு மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொடூரமான சம்பவத்தை அனுபவித்த
மாணவரின் கூற்றுப்படி, பாடசாலையிலிருந்து ஒரு தின்னர் கேனை 5 ஆம் வகுப்பு மாணவர்கள் கழிவறை பகுதிக்கு எடுத்துச் சென்று, அதை ஊற்றி தீ வைத்துக் கொண்டிருந்தனர்.
பின்னர், மாணவர்களில்
ஒருவர் தின்னரை பாட்டிலில் நிரப்பி தனது பாடசாலை பையில் மறைத்து வைத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பாடசாலை நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டதே இந்த தகராறிற்கு
வழிவகுத்ததாக நம்பப்படுகிறது.
5 ஆம் வகுப்பு ஆசிரியர் இல்லாத
நேரத்தில், இந்த காட்டிக் கொடுப்பால் கோபமடைந்த மாணவன், மற்ற
இரண்டு மாணவர்களுடன் சேர்ந்து, ஒரு பெயிண்ட் கொள்கலனை தின்னரால்
நிரப்பி, தீ வைத்து, மாணவர் மீது வீசியுள்ளார்.
குறித்த மாணவன் இதிலிருந்து தப்பிக்க
முயன்ற போதிலும், எரியக்கூடிய தின்னர் அவரது கால்களில்
சிந்தியதால் அவரது காலில் தீப்பிடித்துள்ளது. குறித்த மாணவன் சத்தமிட்டவாறே பக்கத்து
வகுப்பை நோக்கி ஓடியுள்ளான்.
பக்ககத்து வகுப்பு ஆசிரியர் தீயில் எரிந்து
கொண்டிருந்த மாணவனைப் பிடித்து, புத்தகப் பைகளால் அவனது கால்களில்
அடித்து, அவன் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்.
பின்னர் அந்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் உரிய
நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பெயின்ட்
பூசப்பட்டுக்கொண்டிருந்தசமயம் விளக்கு கவிழ்ந்து அருகிலிருந்த தின்னர் தீப்பற்றி
குறித்த மாணவன் காயங்களுக்குள்ளானதாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
எனினும் தீக்காயங்களுக்குள்ளான மாணவன்
பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலம்
தொடர்பில் கரிசனை காட்டப்படாத சந்தர்ப்பத்தில், குருந்துவத்த பொலிஸ்
பொறுப்பதிகாரிக்கு இவ்விடயம் அறியப்படுத்தப் பட்டதும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய
மூன்று மாணவர்களினதும் வாக்கு மூலங்கள்பொலிசாரினாபெறப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
0 கருத்துகள்