காத்தான்குடி மத்திய கல்லூரியில் க.பொ.த சாதாரண தர தமிழ் பாடப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பாக இன்றைய தினகரன் (20.03.2025) நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது.
வினாத்தாள்களுக்கு வழ்கப்பட்ட நேரத்தை மட்டுப்படுத்தி , பரீட்சை மண்டபத்தில் கடமையாற்றிய மேற்பார்வையாளர்களால் விடைத்தாள்கள் நேரத்திற்கு முன்னதாக பெறப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காத்தான்குடி மத்திய கல்லூரியில் இரண்டு பரீட்சை மண்டபங்கள் இருந்த போதிலும், ஒரு மண்டபத்திலேயே இவ்வாாறு அநீதி நடைபெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சை மண்டபத்தில் மேற்பார்வை அதிகாரிகளாக கடமையாற்றிய இரண்டு பரீட்சை மேற்பார்வை அதிகாரிகள் உடனடியாக மேற்பார்வை வேலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றன.
பூரண பத்திரிகை கட்டுரை பின்வரும் இணைப்பில்
0 கருத்துகள்