பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார, மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் முதுகலை துறையின் பணிப்பாளரும், பொருளாதாரத் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல, பிரத்தியே வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்கள் ஆண்டுதோறும் 210 பில்லியன் ரூபாய் சம்பாதிக்கிறார்கள் என்று சிலுமின பத்திரிகைக்கு அறியத் தந்துள்ளார்
சமீபத்திய கணக்கெடுப்பின்படி இந்தக் கணக்கீடுகள் தெரியவந்துள்ளதாகவும், நகர்ப்புறங்களில் நடத்தப்படும் தனிநபர் அல்லது சிறிய குழு வகுப்புகளுக்கான கட்டணம் இதில் உள்ளடக்கப்படவில்லை என்றும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
தரம் 3 முதல் தரம் 5 வரையிலான மாணவர்களுக்கான வகுப்புகளிலிருந்து 3,500 கோடியும்,
க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான வகுப்புகளிலிருந்து 9,400 கோடியும்
உயர்தர மாணவர்களுக்கான வகுப்புகளிலிருந்து 8,000 கோடி ரூபாய்களும் வருடாந்தம் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.
இந்த வகுப்புகளில் சில நள்ளிரவு 12:00 மணிக்குத் தொடங்குவதைச் சுட்டிக்காட்டிய பேராசிரியர், இது குழந்தைகளின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிப்பதாகக் கூறினார். இவ்வாறு சம்பாதிக்கப்படும் பெரும் தொகை எந்த வரி முறைக்கும் உட்பட்டது அல்ல என்றும் அவர் கூறினார்.
0 கருத்துகள்